ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25ஆம் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் உலகளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, இன்றிலிருந்து டிசம்பர் 23ஆம் தேதி வரை பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பாலின சமத்துவம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
- ஆண், பெண் குழந்தைகளைக் காக்கும் சமமான வளர்ப்பு,
- வீட்டுப் பணிகளை சமமாக பகிர்ந்து செயல்,
- பெண்களின் உயர் கல்வியை ஊக்குவித்தல்,
- அனைத்து துறைகளிலும் பெண்களின் சம பங்கேற்பை உறுதி செய்தல்,
- சொத்து உரிமையில் பெண்களை ஊக்குவித்தல்,
- பெண்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை உறுதி செய்தல்,
- பெண்கள் மீது நடைபெறும் உடல், மன, பொருளாதார துன்புறுத்தல்களைத் தடுக்கல்,
- பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை பாதுகாப்பது,
- கருவில் பாலின பரிசோதனையைத் தவிர்ப்பது
- போன்ற முக்கிய அம்சங்கள் வாசிக்கப்பட்டு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சுமார் 200க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த பேரணி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி, இலக்கியம்பட்டி வழியாக பாரதிபுரம் சென்று நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் அ. லலிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஐ. ஜோதி சந்திரா, இணை இயக்குநர் – மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் சாந்தி, உதவி மகளிர் திட்ட அலுவலர் சந்தோஷம், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் பல துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)