தருமபுரி – நவம்பர் 28:
தருமபுரி மாவட்ட இந்து அறநிலைத் துறையின் சார்பில் 28 ஜோடி மூத்த தம்பதியினருக்கான சிறப்பு செய்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி கலந்து கொண்டு தம்பதிகளுக்கான செய்தல் விழாவை துவக்கிவைத்தார். இந்நிகழ்வில் மூத்த தம்பதியினருக்கு அறநிலைத் துறையின் சார்பில் சீர்வரிசையாக வேஷ்டி, புடவை, மஞ்சள், குங்குமம், வளையல், ஆகிய மரியாதை பொருட்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட இந்து அறநிலைத்துறை அறங்காவலர் குழுத் தலைவர் மே. அன்பழகன், நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, தருமபுரி நகர பொறுப்பாளர்கள் நாட்டான் மாது, கௌதம், தருமபுரி கோட்டக் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் சுருளிராஜன், முல்லைவேந்தன், மற்றும் இந்து அறநிலைத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)