தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை மூலமாக, கால்நடை வளர்ப்போருக்காக மானியத்தில் வழங்கப்பட்ட இந்த புல் நறுக்கும் கருவிகள் தீவன பயிர்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கால்நடைகளுக்கு வழங்க உதவுகின்றன. இதன் மூலம் தீவனப் பயிர்கள் விரயம் அடையாமல் தடுக்கப்படுவதோடு, கால்நடைகளின் பால் உற்பத்தித் திறன் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு புல் நறுக்கும் கருவிக்கான மொத்த மதிப்பு ரூ.25,935 ஆகும். இதில் அரசு மானியம் ரூ.12,967.5 மற்றும் பயனாளி பங்களிப்பு ரூ.12,967.5 ஆகும். மொத்தம் ரூ.25.93 இலட்சம் மதிப்பீட்டில் 200 பயனாளிகளுக்கு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் அ. மரியசுந்தர், கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்திப்பணிகள் துணை இயக்குநர் அ. அருள்ராஜ், உதவி இயக்குநர்கள் கே. சரவணன், பி. கனகசபை, ரவிச்சந்திரன், வெற்றிவேல், கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள், தற்போதைய பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)