பொம்மிடி இரயில் நிலையத்தில் கூடுதல் ரயில் நிறுத்தம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில், பொம்மிடி பொதுமக்களும் பயணிகள் சங்கத்தினரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு எடப்பாடி K. பழனிச்சாமி அவர்களை சந்தித்து மனு வழங்கியிருந்தனர். அப்போது அவர், இதுகுறித்து ராஜ்யசபா உறுப்பினர் டாக்டர் எம். தம்பிதுரை அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கச் சொல்லுவதாக உறுதியளித்திருந்தார்.
இதனையடுத்து, இன்று பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பாக டாக்டர் தம்பிதுரை அவர்களை நேரில் சந்தித்து, கோவை எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், மற்றும் பெங்களூரு மார்க்கத்தில் செல்லும் கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களுக்கு பொம்மிடியில் நிறுத்தம் வழங்குமாறு மனு அளிக்கப்பட்டது.
மனுவைப் பெற்ற டாக்டர் தம்பிதுரை அவர்கள், “பல ஆண்டுகளுக்கு முன்பு வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸுக்கு நானே நிறுத்தம் பெற்றுத்தந்தேன்” என நினைவுகூர்ந்ததுடன், தற்போதைய கோரிக்கைக்கும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் வணிகர் சங்கம் சார்பில் B. R. M. மாதேஸ், பயணிகள் சங்க தலைவர் ஆசாம்கான், செயலாளர் ஜெபசிங், பொருளாளர் முனிரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)