தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சனத்குமார் நதியில், அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் சார்பில் கங்கா ஆரத்தி விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அகில பாரத சன்னியாசிகள் சங்க நிறுவனர் சுவாமிகள் தலைமையேற்றார்.
அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம், அன்னை காவேரி நதி நீர் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் நீர்நிலை பாதுகாப்பு இயக்கம் இணைந்து நடத்திய இந்த விழாவில், நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டாமல் இருக்கவும், நீர்நிலைகளை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
முன்னதாக, அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் தருமபுரி மாவட்ட தலைவர் ஸ்ரீ சங்கர் குருசாமி தலைமையில், ஸ்ரீ வேணுகோபால ஐயப்ப சுவாமி திருக்கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, சனத்குமார் நதியில் கங்கா பூஜை நடைபெற்றது. பின்னர் கற்பூர தீபாராதனை காண்பித்து பக்தர்கள் வழிபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் பல பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா நிறைவாக அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

.jpg)