தருமபுரி, அக்டோபர் 04:
புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி இன்று அதிகாலை முதலே தருமபுரி உழவர் சந்தை மக்கள் கூட்டத்தால் அலைமோதியது. புதிய காய்கறி, பழங்கள் வாங்க பொதுமக்கள் பெருமளவில் திரண்டனர். இதனால், உழவர் சந்தை சாலையில் இருபுறமும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை சீர்படுத்த போக்குவரத்து காவலர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டனர்.
அதேபோன்று, தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் உள்ள பூ மார்க்கெட்டிலும் அதிகாலை முதலே பரபரப்பு நிலவியது. பூ வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் திரண்டதால் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில், “பெரும் திரளான மக்கள் கூடும் இவ்வாறான விழாக்காலங்களில் காவல்துறை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கு பணிகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்” என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

.jpg)