Type Here to Get Search Results !

8-ஆவது ஊதியக் குழுவை உடனடியாக அமைக்க வலியுறுத்தி தருமபுரியில் ஓய்வூதியர் சங்கங்களின் ஆர்ப்பாட்டம்.


தருமபுரி, அக். 10:

புதுடில்லியில் நடைபெறும் தேசிய அளவிலான தர்ணா போராட்டத்துக்கு ஆதரவாக, தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு, ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் இன்று ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய அரசிடம் 8-ஆவது ஊதியக் குழுவை உடனடியாக அமைக்கவும், மேலும் 2025 மார்ச் 25 ஆம் தேதி பென்ஷன் விதிகளில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தத்தை வாபஸ் பெறவும் கோரி, நாடு முழுவதும் ஒருங்கிணைந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.


இதன் ஒரு பகுதியாக, 2025 அக்டோபர் 10ஆம் தேதி இந்தியா முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மேலும், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய பிரதமர், குடியரசுத் தலைவர், மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனு அளிக்கப்படும் என ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது. தருமபுரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் டி. பாஸ்கரன் தலைமையாற்றினார். 


இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பி. சுப்பிரமணியன், மின் ஊழியர் ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ஆர். சுந்தரமூர்த்தி, போக்குவரத்து கழக ஓய்வூதியர் சங்க மாநில இணை செயலாளர் கே. கருப்புசாமி, தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் எஸ். பழனிசாமி, மாவட்ட செயலாளர் எம். பெருமாள், எல்.ஐ.சி ஓய்வூதியர் சங்க தலைவர் ஏ. மாதேஸ்வரன், பிஎஸ்என்எல் அதிகாரிகள் ஓய்வூதியர் சங்க தலைவர் ஊமை ஜெயராமன், அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க தலைவர் ஆர். சுப்பிரமணி, மற்றும் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மண்டல செயலாளர் ரத்தினவேல் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.


இந்நிகழ்ச்சியில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பி. கிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies