தருமபுரி. அக். 22 -
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் தாக்கமாக தருமபுரி மாவட்டத்திலும் தொடர்ச்சியான மழை பெய்து வருகின்றது. இதனையடுத்து, மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை (அக்டோபர் 23, 2025) ஒரு நாள் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மழையால் சாலைகள் வழுக்கல், நீர் தேக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்றும் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

.jpg)