தருமபுரி, அக்டோபர் 2:
இந்தத் திட்டத்தின் மூலம் ஓசூர் மாநகராட்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி நகராட்சிகள், 16 பேரூராட்சிகள், 20 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 6,802 குடியிருப்புகளைச் சார்ந்த 38.81 இலட்சம் மக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பெறவுள்ளனர்.
திட்டத்தின் பின்னணி
-
தமிழ்நாடு முழுவதும் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக, 1971-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கப்பட்டது.
-
தற்போது, வாரியம் மூலம் 5.28 கோடி மக்கள் பயன்பெறும் வகையில், நாளொன்றுக்கு 2,353 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.
-
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நிலத்தடி நீரில் புளோரைடு உப்புத்தன்மை அதிகமாக இருப்பதால், மக்களின் உடல் நலப் பிரச்சனைகள் அதிகமாக இருந்தன. இதைத் தீர்க்கும் நோக்கில் ஒகேனக்கல் திட்டம் (முதல், இரண்டாம் கட்டம்) ரூ.1,928.80 கோடியில் செயல்படுத்தப்பட்டு, தற்போது நாளொன்றுக்கு 145 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.
மூன்றாம் கட்டம் – சிறப்பம்சங்கள்
-
நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு:
-
மாநகராட்சி/நகராட்சி பகுதிகளில் 135 லிட்டர்,
-
பேரூராட்சிகளில் 70 லிட்டர்,
-
ஊரகப் பகுதிகளில் 55 லிட்டர் குடிநீர் வழங்கப்படும்.
-
-
காவிரி ஆற்றிலிருந்து நீர் எடுக்கப்பட்டு, பருவதனஹள்ளி சுத்திகரிப்பு நிலையத்தில் 242.50 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்படும்.
-
அங்கிருந்து 157.25 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சேமிப்பு தொட்டி, 32 அழுத்த விசைத்தொட்டிகள், 324 முதன்மை நீர்த்தேக்க தொட்டிகள், 598 தரைமட்ட தொட்டிகள், 1009 மேல்நிலை தொட்டிகள் வழியாக நீர் விநியோகிக்கப்படும்.
-
திட்டம் 11 தொகுப்புகளாக செயல்படுத்தப்படும்.
-
இதில், ரூ.2,283.40 கோடி ஒன்றிய அரசின் பங்கீடு, ரூ.1,761 கோடி மாநில அரசின் பங்கீடு, மீதமுள்ள ரூ.4,384.10 கோடி ஜப்பான் பன்னாட்டு நிதி உதவி மூலம் கிடைக்கிறது.
இந்த திட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம், தருமபுரி–கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல், தொழில் வளர்ச்சி மையமாக வேகமாக வளரும் ஓசூர் மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்களுக்கும் நீடித்த குடிநீர் வழங்கப்பட்டு, பெரிய அளவில் தொழில் வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புகளுக்கும் ஆதரவாக இருக்கும்.

.jpg)