அரூர், அக். 12 -
தருமபுரி மாவட்டம் அரூரில், ‘தண்டகாரண்யம்’ திரைப்படத்தின் திறனாய்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் அண்ணல் அம்பேத்கர் அறிவக அறக்கட்டளையில் யாசட் சங்கத்தின் சார்பில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திரைப்படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை, கலை இயக்குநர் த. ராமலிங்கம், ஒளிப்பதிவாளர் பிரதீப் காளிராஜா ஆகியோர் கலந்து கொண்டு, திரைப்படத்தின் படைப்புத் தளம், சமூக நோக்கு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களைப் பற்றி கலந்துரையாடினர்.
நிகழ்ச்சியில் முனைவர் திருவாசகம், யாசட் சங்கத் தலைவர் மாதையன், செயலாளர் விடுதலைவேலன், பொருளாளர் மருத்துவர் சதீஷ், முன்னோடிகள் மு. சிவராமன், க. நரசிம்மன், ஜெய்பீம் ஜெயப்பிரகாஷ், சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்று கருத்துரையாற்றினர். நிகழ்ச்சி உற்சாகமாகவும் பயனுள்ளதாகவும் நடைபெற்றது.