தருமபுரி, செப். 10 (ஆவணி 25):
தருமபுரி மாவட்டம் மற்றும் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான கூட்டம் செப்டம்பர் 12-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11.00 மணிக்கு தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு மாதமும் முதல் வார வெள்ளிக்கிழமையன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி, இந்த மாத கூட்டத்தில், சம்மந்தப்பட்ட அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயி சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு குறைகளை முன்வைத்து தீர்வு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர் திருமதி இரா. காயத்ரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
.gif)

.jpg)