தருமபுரி, செப் . 16 (ஆவணி 31) -
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாதேமங்கலம் ஊராட்சியில் தின்னஅள்ளி சேவை கட்டிடத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் வீட்டு மனை பட்டா, பட்டா சிட்டா பெயர் மாற்றம், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட சேவைகளை வேண்டி துறைசார் அலுவலர்களிடம் விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர். மேலும், மருத்துவ முகாமில் பிபி, சர்க்கரை நோய் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் இம்முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று ஆய்வு செய்தார். தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இம்முகாமில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், ஊராட்சி ஒன்றிய செயலாளர், பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.