தருமபுரி – செப்டம்பர் 16 (ஆவணி 31, செவ்வாய்) -
தருமபுரி மாவட்டம், வேளாண்மை துறையின் கீழ் பயன்பாட்டில் இருந்த ஒரு அரசு ஈப்பு வாகனம் கழிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை துணை இயக்குநர் (தருமபுரி) பயன்படுத்தி வந்த TN07G0240 என்ற எண்ணுடைய ஈப்பு வாகனத்தின் ஆரம்ப ஏலத் தொகை ரூ.22,000/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏலம் வரும் 09.10.2025 அன்று காலை 11.00 மணிக்கு, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள், நேரில் கலந்து கொண்டு விலைப்புள்ளி (Bid) அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.