பென்னாகரம், செப்டம்பர் 12 (ஆவணி 27)
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டார வட்டுவனஅள்ளி நீர்வடிப்பகுதியில், பிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசன திட்டம் (PMKSY-WDC-2.0-IV) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை துணைத்தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. துரை. ரவிச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (12.09.2025) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் போது மரக்கன்றுகள் நடப்பட்டு, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சுணை நீர்தேக்க சேமிப்பு தொட்டி, பெரிய தடுப்பணை, கசிவுநீர்குட்டை உள்ளிட்ட இயற்கை வள மேம்பாட்டு பணிகள் மற்றும் பண்ணை உற்பத்தி திட்டத்தின் கீழ் உபகரணங்கள் விநியோகிக்கும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
பின்னர், ஜெல்மாரம்பட்டி சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 2 பயனாளர்களுக்கு களையெடுக்கும் இயந்திரம், 2 பயனாளர்களுக்கு தீவன புல் நறுக்கும் இயந்திரம், 2 பயனாளர்களுக்கு விசை தெளிப்பான் மற்றும் 1 பயனாளருக்கு பழச்செடிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் வேளாண்மை இணை இயக்குநர் திருமதி ர. ரத்தினம், உதவி பொறியாளர்கள் திரு. குணசீலன், திரு. பால்ராஜ் மற்றும் மாவட்ட நீர்வடிப்பகுதி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)