Type Here to Get Search Results !

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி நினைவு நாள் அனுசரிப்பு.


பாப்பாரப்பட்டி, செப்டம்பர் 13 (ஆவணி 28)

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நடைபெற்றது.


இந்நிகழ்வுக்கு வட்டாரச் செயலாளர் ஆர். சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே. விசுவநாதன் நினைவஞ்சலி உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சண்முகம், லோகநாதன், சிலம்பரசன், சிஐடியூ நிர்வாகி முருகேசன், சிபிஎம் கிளைச் செயலாளர்கள் ரஜினி, ராஜசேகர், முனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


நினைவு தினத்தை முன்னிட்டு சிபிஎம் கட்சியினர் உடல் தானம் மற்றும் கண்தானம் செய்ய விருப்பக் கடிதங்கள், உறுதிமொழி ஆவணங்களை வழங்கினர். பின்னர், சீதாராம் எச்சூரி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies