Type Here to Get Search Results !

பெரியாம்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்.


காரிமங்கலம், 11 செப்டம்பர் 2025 (ஆவணி 26) -

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், பெரியாம்பட்டி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமையில் நடைபெற்றது. முகாமில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அடிலம் அன்பழகன், தாசில்தார் மனோகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சர்வோத்தம்மன், கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்து குத்துவிளக்கு ஏற்றி தொடக்குவிழாவை நடத்தினர்.


இம்முகாமில் பெரியாம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள், வீட்டுமனை பட்டா, மகளிர் உரிமைத் தொகை, முதியோர் ஓய்வூதியம், குடும்ப அட்டை, மாற்றுத் திறனாளி நல வாரிய அட்டை உள்ளிட்ட பல்வேறு தேவைகள் குறித்து துறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தனர். தகுதியான பயனாளிகளுக்கு பட்டா, மின்வாரிய பெயர் மாற்றம், கலைஞர் காப்பீட்டு திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை போன்ற சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் திமுக காரிமங்கலம் மத்திய ஒன்றிய செயலாளர் கண்ண பெருமாள், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மகேஷ்குமார், ஒன்றிய துணை செயலாளர் சித்ராவடிவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர், நிர்வாகிகள் சுரேஷ், விஜய், புகழேந்தி, கிருஷ்ணமூர்த்தி, சீனிவாசன், செல்வதுரை, பூபதி, மஞ்சுநாத், அண்ணாமலை, காசியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies