தருமபுரி – செப்டம்பர் 13 (ஆவணி 28)
தருமபுரி மாவட்டம் நாய்க்கன் கொட்டாயில் நக்சல்பாரி புரட்சியாளர்கள் அப்பு, பாலன் நினைவேந்தல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நினைவேந்தல் பேரணிக்கு தோழர் கோபிநாத், மாநில இணைச் செயலாளர் (புரட்சிகர மக்கள் அதிகாரம்) தலைமையில் எழுச்சியுரையுடன் தொடக்கம் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து முழக்கங்களுடன் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
தமிழ்வாணன், சித்தாநந்தம் ஆகியோர் செங்கொடி ஏற்றி வைக்க, பன்னீர்செல்வம் (இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கம்) தியாகிகளுக்கு மாலை அணிவித்தார். அஞ்சலி நிகழ்வில் புரட்சிகர மக்கள் அதிகாரம் கலைக்குழு மற்றும் முற்போக்கு இளைஞர் முன்னணி தியாகிகளுக்காக அஞ்சலி பாடல்களைப் பாடினர்.
நினைவேந்தல் கூட்டத்திற்கு ஜீவா (முற்போக்கு இளைஞர் முன்னணி) தலைமை தாங்கினார். உரையாற்றியவர்களில் முத்துக்குமார் (மாநில செயலாளர் – புரட்சிகர மக்கள் அதிகாரம்), பாலன் (தமிழ்தேச மக்கள் முன்னணி), தமிழ்வாணன் (இனங்களின் இறையாண்மைக்கான மாணவர் இளைஞர் இயக்கம்), பழனி (முற்போக்கு இளைஞர் முன்னணி), சுந்தர விநாயகம் (CPIML) ஆகியோர் இடம்பெற்றனர். இறுதியில் முனுசாமி (இனங்களின் இறையாண்மைக்கான மாணவர் இளைஞர் இயக்கம்) நன்றியுரை ஆற்றினார்.
.gif)

.jpg)