தருமபுரி – செப்டம்பர் 12 (ஆவணி 27):
இந்த முகாமில் பாரத ஸ்டேட் பாங்க், கனரா பாங்க், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூனியன் பாங்க், பாங்க் ஆப் பரோடா, எச்.டி.எப்.சி வங்கி உள்ளிட்ட பல வங்கிகள் பங்கேற்றன. மாவட்ட ஆட்சியர் சதீஷ், 40 மாணவர்களுக்கு மொத்தம் ரூ.3.90 கோடி கல்விக்கடன் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதில், “கல்விக்கடன் என்பது பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வியை தொடரும் பொற்கால வாய்ப்பு. மருத்துவம், பொறியியல், வெளிநாட்டு கல்வி போன்ற அதிக கட்டண படிப்புகளுக்கும் இது பெரிய ஆதரவாக அமைகிறது. தருமபுரி மாவட்டத்தில் 1,500 மாணவர்களுக்கு ரூ.40 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 3,000 மாணவர்களுக்கு கடன் வழங்க வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்தார்.
ஏற்கனவே இந்த ஆண்டு மட்டும் தருமபுரி மாவட்டத்தில் 553 மாணவர்களுக்கு ரூ.12.06 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலும் 310 மாணவர்களுக்கு ரூ.12.33 கோடி கல்விக்கடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் வசதிக்காக ஆவணங்கள் சமர்ப்பிக்க வங்கி கவுண்டர்கள் அமைக்கப்பட்டன. மேலும் கல்விக்கடன் தொடர்பான சந்தேகங்களை தீர்க்க தனி அரங்குகளும் இருந்தன. டிசம்பர் மாத இறுதிக்குள் வட்டார அளவில் கல்விக்கடன் முகாம்கள் தொடர்ச்சியாக நடைபெறும் எனவும், மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறும் ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் கல்லூரி நிறுவனர் வடிவேலன், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, கோட்டாட்சியர் காயத்ரி, வங்கி மேலாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)