தருமபுரி, செப். 10 (ஆவணி 25):
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்தில் பதிவு பெறாமல் இயங்கிவந்த 32 செங்கல் சூளைகளை மூடி சீலிட மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இஆப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் மேற்கொண்ட புலனாய்வில், 32 செங்கல் சூளைகள் உரிய அரசு பதிவு பெறாமல் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை வழங்கப்பட்டு, 15 நாட்களுக்குள் https://mimas.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், செப்டம்பர் 3-ஆம் தேதியுடன் அந்த காலக்கெடு முடிவடைந்த பின்னரும், உரிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காததால், தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள் 1959, விதி எண் 19(2)-ஐ மீறியதாகும். எனவே, பதிவு பெறாமல் இயங்கும் சூளைகள் அனுமதிக்கப்பட முடியாததால், அவற்றை மூடி சீலிட காரிமங்கலம் வருவாய் வட்டாட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
.gif)

