தருமபுரி, செப். 09 | ஆவணி 24 -
தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தருமபுரி பிரிவு சார்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் இன்று (09.09.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்களால் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில், மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி ஒருவருக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்கள்.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், 26.08.2025 முதல் தருமபுரியில் நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகள் பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு பணியாளர்கள் என 5 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன.
இன்றைய தினம் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம், அடாப்டெட் வாலிபால், எறிபந்து, கபாடி, இறகுபந்து, மேஜைப்பந்து போன்ற பல்வேறு போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டன. இப்போட்டிகளில் முதலிடம் பெறும் அணிகள் மற்றும் வீரர்–வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க அழைக்கப்படுவர். மேலும், முதலிடம் பெறுவோருக்கு ரூ.3000, இரண்டாம் இடம் பெறுவோருக்கு ரூ.2000, மூன்றாம் இடம் பெறுவோருக்கு ரூ.1000, பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
இதற்கிடையில், நாளை (10.09.2025) பொதுப்பிரிவு ஆண்களுக்கான கபாடி போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். பி. வெங்கடேஸ்வரன், தருமபுரி நகர மன்ற தலைவர் திருமதி லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திரு. ஜெ. முத்துகுமார், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திருமதி சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)