தருமபுரி, செப்டம்பர் 15 (ஆவணி 30):
விண்ணப்பங்களை https://www.tnesevai.tn.gov.in இணையதளம் மூலமாகவோ அல்லது அருகிலுள்ள இ-சேவை மையங்கள் வாயிலாகவோ மட்டுமே சமர்ப்பிக்கலாம். கடைசி நாளுக்குப் பின் அல்லது இணையவழி அல்லாமல் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்
-
விண்ணப்பதாரர் புகைப்படம்
-
முகவரிச் சான்று
-
புகைப்படத்துடன் கூடிய ஆதார் / பான் கார்டு / வாக்காளர் அட்டை
-
பட்டா அல்லது சொத்து பத்திரம்
-
வாடகை கட்டடமாக இருந்தால் நோட்டரி சான்றுடன் கூடிய வாடகை ஒப்பந்தம்
-
தற்காலிக உரிமக் கட்டணமாக ரூ.600 (இணையவழி விண்ணப்பத்திற்கு ரூ.500) செலுத்தி பெற்ற சலான்
-
உள்ளாட்சி அமைப்பிற்கு கட்டணம் செலுத்திய இரசீது
-
கட்டடத்தின் அங்கீகரிக்கப்பட்ட நீல வரைபடம்
கடைக்கான முக்கிய விதிமுறைகள்
-
கடை கல் அல்லது தார்சு கட்டடமாக, தரைதளத்தில் (Ground floor only), ஒற்றைத் தளமாக (Single story) இருக்க வேண்டும்.
-
பரப்பளவு குறைந்தது 9 ச.மீ. – அதிகபட்சம் 25 ச.மீ. இருக்க வேண்டும்.
-
கதவுகள் வெளிப்புறமாக திறக்கும் வகையில் இருக்க வேண்டும்; இருபுறமும் வழி அமைந்திருக்கும்.
-
வேறு பொருட்கள் கடையில் வைக்கக்கூடாது.
-
மின்சார விளக்குகள் மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும்; அனைத்து மின் இணைப்புகளும் பாதுகாப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும்.
-
எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் வைக்கக் கூடாது.
-
செயல்திறன் உள்ள தீ தடுப்பு சாதனங்கள் கட்டாயம் வைக்கப்பட வேண்டும்.
-
அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மீறி பட்டாசுகள் வைத்தால் பறிமுதல் செய்யப்படும்.
-
தீயணைப்பு, சுகாதாரம் மற்றும் காவல்துறையிடமிருந்து தடையின்மைச் சான்று பெற்றிருக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள், மேற்கண்ட விதிமுறைகள் அனைத்தையும் கடைபிடித்து மட்டுமே தற்காலிக பட்டாசு கடை அமைக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.