தருமபுரி, செப்டம்பர் 15 (ஆவணி 30):
இதன்படி, மேசன், கார்பெண்டர், கம்பிவேலை, தச்சு வேலை, மின் பணியாளர், பிளம்பர், வெல்டர், வர்ணம் பூசுதல், ஏ.சி. மெக்கானிக், கண்ணாடி அறுத்தல், சலவைக்கல் ஒட்டுதல் உள்ளிட்ட 12 தொழில் பிரிவுகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் இப்பயிற்சி செப்டம்பர் 18ஆம் தேதி முதல் தருமபுரி கடகத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொடங்கி வாரந்தோறும் தொடர்ந்து நடைபெறும். பயிற்சியில் பங்கேற்போருக்கு சான்றிதழ், இலவச காலை உணவு, மதிய உணவு, மாலை சிற்றுண்டி வழங்கப்படும். மேலும், பயிற்சி முடிவுற்றதும் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ஊதியமாக ரூ.5600 செலுத்தப்படும்.
பங்கேற்க விரும்பும் பதிவு பெற்ற தொழிலாளர்கள், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.