Type Here to Get Search Results !

16ம் தேதி மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் விவரங்கள்.


தருமபுரி, செப்.15 (ஆவணி 30):

மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டு, விரைவில் தீர்வு காணும் நோக்கில் தமிழக அரசு மாநிலம் முழுவதும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்டத்தில் செப்டம்பர் 16, 2025 செவ்வாய்க்கிழமை பல இடங்களில் இம்முகாம்கள் நடைபெறவுள்ளன.


மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ர. சதீஷ், இ.ஆ.ப., தலைமையில் நடைபெறும் இம்முகாம்களில் பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரடியாக முன்வைக்கலாம். முன்வைக்கப்பட்ட குறைகள் தொடர்பாக உரிய துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அதிகபட்சம் 45 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


முகாம் நடைபெறும் இடங்கள்:

  • தருமபுரி மாநகராட்சி (வார்டுகள் 19, 20, 21, 22): BBC திருமண மண்டபம், சாலை விநாயகர் தெரு, தருமபுரி.

  • தருமபுரி – நள்ளாசேனஹள்ளி, நூலஹள்ளி: புதிய பஞ்சாயத்து அலுவலகம் எதிரில், மண்டு வளாகம்.

  • பெண்ணாகரம் – வட்டுவனஹள்ளி: VPRC கட்டிடம், ஜெலமரம்பட்டி.

  • நல்லம்பள்ளி (தின்னஹள்ளி, மாதேமங்கலம்): PUMS பள்ளி வளாகம், தின்னஹள்ளி.

  • எரியூர் – சுஞ்சல்நாதம்: ராமசாமி பொன்னம்மாள் திருமண மண்டபம்.

  • பாலக்கோடு – கெண்டேனள்ளி: சமுதாய கூடம், பாலக்கோடு.


மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மக்கள் தங்கள் குறைகள், கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளை நேரடியாகக் கூறி, அரசின் உடனடி உதவியைப் பெறும் நல்ல வாய்ப்பாக இந்த முகாம்கள் அமையும். எனவே அதிக அளவில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884