Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் – 453 மனுக்கள் வரப்பெற்றன.


தருமபுரி, 08 செப்டம்பர் 2025 (ஆவணி 23):

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி போன்ற அடிப்படை தேவைகள், பட்டா வழங்குதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்தனர். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள் மற்றும் உபகரணங்கள் வழங்கவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.


மொத்தம் 453 கோரிக்கை மனுக்கள் இக்கூட்டத்தில் பெறப்பட்டன. பொதுமக்கள் அளித்த மனுக்களை துறை அலுவலர்களிடம் வழங்கி, தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வை விரைந்து வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியிருப்பதாகவும், அதன்படி அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்குள் தீர்வுகளை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர். கவிதா, மாவட்ட வன அலுவலர் திரு. கா. இராஜாங்கம், இ.வ.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு. ரூபன் சங்கர் ராஜ் மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies