Type Here to Get Search Results !

தருமபுரி கல்விக்கடன் முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


தருமபுரி, செப். 09 | ஆவணி 24 -

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, மருத்துவம், வேளாண்மை, கால்நடை, பாரா மெடிக்கல் மற்றும் பல்வேறு தொழில் சார்ந்த பட்டப்படிப்பு, பட்டய படிப்புகளில் சேர்ந்து கல்வி பயிலும் மாணவர்களுக்காக கல்விக்கடன் முகாம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட உள்ளது.

இம்முகாம் வருகிற 12.09.2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தருமபுரி வட்டம், குண்டல்பட்டி கிராமம், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வருவான் வடிவேலன் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும்.

ஏற்கனவே கல்விக்கடன் விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு அனுமதி சீட்டுகள் வழங்கப்படும். புதியதாக கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் கல்வி நிறுவன சான்று, பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, பான் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களுடன் வர வேண்டும்.

மேலும் கல்விக்கடனுக்குத் தேவையான வருமானச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்களை மாணவர்கள் விரைவாகப் பெற மாவட்ட வருவாய்த் துறை மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் அதிக அளவில் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies