பொம்மிடி, செப்டம்பர் 12 (ஆவணி 27):
போரூராட்சி மாதா கோவில், வினோபாஜி தெரு பகுதிகளில் வசிக்கும் தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் தலித் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 200 பேருக்கு 1985 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால், அந்த நிலங்கள் பிற நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டதாகவும், தங்களுக்குரிய நிலத்தை காட்டி ஒப்படைக்க வலியுறுத்தியும் கடந்த 35 ஆண்டுகளாக அரசு அலுவலர்களிடம் மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, சுமார் 200க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் குழந்தைகளுடன் நிகழ்ச்சி நுழைவாயிலில் அமர்ந்து 2 மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். “35 ஆண்டுகளில் 10 மாவட்ட ஆட்சியாளர்கள், தாசில்தார்கள், தனித்தாசில்தார்கள், சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் என நூற்றுக்கும் மேற்பட்ட முறை மனுக்கள் அளித்தும் பலன் இல்லை” என்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் வலியுறுத்தினர்.
பின்னர், போராட்டக்காரர்களிடம் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு வாரத்திற்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் தங்கள் தர்ணாவை வாபஸ் பெற்றனர்.
மேலும், பேரூராட்சிக்கு சொந்தமான பஸ்டேன்ட் பகுதியில் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல், அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்த சமுதாயக் கூடம், இம்முகாமிற்காக நேற்று திறக்கப்பட்டதோ அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
.gif)

.jpg)