Type Here to Get Search Results !

அதியமான் கோட்டை காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி திருவிழா.


அதியமான்கோட்டை, செப்டம்பர் 14 (ஆவணி 29):

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ காலபைரவர் திருக்கோவிலில், ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அஷ்டமி நாளையொட்டி பக்தர்கள் நெய் தீபம், எலுமிச்சை பழம் தீபம், தேங்காய் தீபம், சாம்பூசணிக்காய் தீபம் உள்ளிட்ட பல்வேறு வகையான தீபங்களை ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கர்நாடக மாநிலத்திலிருந்தும், தருமபுரி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர். திருவிழாவில் பங்கேற்ற அனைவருக்கும் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies