தருமபுரி, செப்டம்பர் 14 (ஆவணி 29):
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் திரு எடப்பாடி கே. பழனிசாமி “புரட்சி – தமிழரின் எழுச்சி” என்ற பெயரில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற மக்கள் சந்திப்பு பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
இந்த பயணம் மூலம் அவர் தருமபுரி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்புகள் ஆகியவற்றில் கலந்து கொண்டு, தேர்தல் முன்னேற்றம், மக்கள் பிரச்சினைகள் மற்றும் அரசியல் வழிகாட்டுதல்களை பகிர்கிறார். அ.தி.மு.க தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, முதலில் செப்டம்பர் 17–18 நாட்களில் தருமபுரி மாவட்டம் அரூரில் தொடங்கி மாவட்டம் முழுவதும் மக்கள் சந்திப்புகள் நிகழ்த்தப்படவிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக, 17–18 நாட்களுக்கு திட்டமிடப்பட்ட பயணம் செப்டம்பர் 28–29 தேதிகளுக்கு மாற்றப்பட்டு, புதிய அட்டவணையில் மக்கள் சந்திப்புகள், ஊராட்சி வருகைகள், பொதுக்கூட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
.gif)

.jpg)