தருமபுரி, செப். 15 (ஆவணி 30) -
தருமபுரி மாவட்ட இந்து அறநிலையத்துறை சார்பில், இலவச திருமண விழா சிறப்பாக நடைபெற்றது. தருமபுரி குமாரசாமிபேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் 6 ஜோடிகளுக்கும், மணியம்பாடி பெருமாள் கோவிலில் 10 ஜோடிகளுக்கும் திருமண நிகழ்ச்சி நடந்தது. இதன் மூலம் மொத்தம் 16 ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைந்தனர்.
தருமபுரியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது ஆகியோர் கலந்து கொண்டு 6 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தனர். மேலும், திருமணமான மணமக்களுக்கு 4 கிராம் தங்க திருமாங்கல்யம், கட்டில், பீரோ, மெத்தை, தலகாணி, குத்துவிளக்கு மற்றும் எவர்சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் குமாரசாமிபேட்டை முருகர் கோயில் ஆணையர் முருகன், கோவிலின் செயல் அலுவலர்கள், நகர மன்ற உறுப்பினர் பாண்டியன், அரசு துறை அலுவலர்கள், மணமக்கள் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)