தருமபுரி – செப்டம்பர் 14 (ஆவணி 29):
இந்த முயற்சியில் பள்ளி மாணவர்கள், சமூக அமைப்புகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தாயின் பெயரில் மரக்கன்றுகள் நடுவதன் மூலம் பசுமை வளம் அதிகரிப்பதோடு, தாயின் அன்பையும் நினைவாகக் கொண்டாடும் பசுமை மரபும் உருவாகும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். ஒவ்வொருவரும் தங்கள் தாயின் பெயரில் குறைந்தது ஒரு மரத்தை நட்டு பராமரிக்க வேண்டும் என்பது இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
ஆதி பவுண்டேஷன் சார்பில் நத்தஅள்ளி, இன்டூர், சோமனஅள்ளி, பண்டள்ளி, கூலி கொட்டாய், நடப்பனஅள்ளி ஆகிய கிராமங்களின் அரசு பள்ளிகளுக்கு மொத்தம் 2,500 கன்றுகள் வழங்கப்பட்டது. இக்கன்றுகள் ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, பள்ளி வளாகங்களில் மாணவர்கள் நேரடியாக நட்டு வளர்க்கவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆதி பவுண்டேஷன் நிறுவனர் ஆதிமூலம், அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர். அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்ததாவது: “தாயின் பெயரில் நடப்படும் ஒவ்வொரு மரமும், அந்த குடும்பத்திற்கே பெருமை சேர்க்கும். அதனை பராமரித்து வளர்ப்பது அனைவரின் பொறுப்பாகும். இந்த முயற்சி எதிர்கால சந்ததிக்கு பசுமைச் சூழலை பரிசளிக்கும்” எனக் கூறினர்.
.gif)

.jpg)
.jpg)