தருமபுரி – செப்டம்பர் 13 (ஆவணி 28) -
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாநில ஆள்சேர்ப்பு நிலையம் சென்னை மற்றும் கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் தருமபுரி இணைந்து, கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 481 உதவியாளர் / இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தேர்வு நடத்தப்பட உள்ளது.
இந்தத் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 15.09.2025 முதல் துவங்கி, திங்கள் முதல் வெள்ளி வரை வாரந்தோறும் தொடர்ந்து நடைபெறும்.
தேர்வில் பங்கேற்க குறைந்தபட்ச கல்வித் தகுதி:
-
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, மேலும்
-
கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
தேர்வர்களுக்கான வசதிகள்:
-
3,000 க்கும் மேற்பட்ட நூல்கள் அடங்கிய இலவச நூலகம்
-
பள்ளி பாடப்புத்தகங்கள் பயன்பாடு
-
இலவச Wi-Fi
-
இலவச கணினி பயன்பாடு
பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் https://shorturl.at/wsLm5 என்ற இணைப்பின் மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 04342–288890 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். தகுதியுடைய தேர்வர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.