பொம்மிடி, செப்டம்பர் 10 (ஆவணி 25):
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பையர்நத்தம் கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில், அரூர் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வன்கொடுமை சட்ட விதிகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. மேலும், கிராமத்தில் தொடர்ந்து குற்றச்செயல்கள் நடைபெறுவதைத் தடுக்க, அனைத்து சமூக மக்களும் அமைதியாக வாழ வேண்டும் என்பதற்காக காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
.gif)

