தருமபுரி – செப்டம்பர் 14, 2025 / ஆவணி 23, 2056
தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் சிறப்பு பேட்டி அளித்தார்.
நான்,
-
தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதாசாரத்தைக் குறைக்கும் அநியாயமான தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவேன்.
-
வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் மக்களின் வாக்குரிமையை பறிக்கும் SIR-க்கு எதிராக நிற்பேன்.
-
நீட் உள்ளிட்ட இளைஞர்களை பாதிக்கும் திட்டங்களுக்கு எதிர்த்து, மாணவர்களுக்கு உரிய கல்வி நிதிக்காக போராடுவேன்.
-
தமிழ் மொழி, பண்பாடு, பெருமைக்கு எதிரான பாகுபாடுகளை எதிர்த்துப் போராடுவேன்.
-
பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் ஆகிய உழைக்கும் வர்க்க நலன்களுக்காகப் போராடுவேன்.
எதற்கும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்” என தெரிவித்தார்.
.
மேலும், நாளை (செப்.15) பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு, தருமபுரி மேற்கு மாவட்டத்தின் மூன்று சட்டமன்ற தொகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை விவரங்களையும் வெளியிட்டார்.
-
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி – 314 வாக்குசாவடிகளில் 1,20,006 உறுப்பினர்கள்
-
அரூர் தொகுதி – 305 வாக்குசாவடிகளில் 1,10,257 உறுப்பினர்கள்
-
பாலக்கோடு தொகுதி – 278 வாக்குசாவடிகளில் 1,09,103 உறுப்பினர்கள்
மொத்தம் 897 வாக்குசாவடிகளில் 3,39,366 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்” உறுதிமொழி ஏற்கப்படும் என்று அவர் கூறினார்.
.gif)

.jpg)