Type Here to Get Search Results !

தருமபுரியில் ஏழாவது புத்தகத் திருவிழா – செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 5 வரை நடைபெறவுள்ளது.


தருமபுரி, செப். 08, 2025 (ஆவணி 21):

தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் ஏழாவது புத்தகத் திருவிழா, தருமபுரி மதுரா பாய் சுந்தர ராஜா ராவ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.


இந்த விழா செப்டம்பர் 26, 2025 (வெள்ளிக்கிழமை) முதல் அக்டோபர் 5, 2025 வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். விழாவை செப்டம்பர் 26 ஆம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமையில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் துவக்கி வைத்து சிறப்புரை நிகழ்த்துகிறார்.


புத்தகத் திருவிழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு கருத்தரங்கம், பட்டிமன்றம், மாணவர்கள், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மொத்தம் 60 அரங்குகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகள் மற்றும் லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.


பொதுமக்கள் புத்தகத் திருவிழாவில் கலந்துகொண்டு அனைத்து வகையான புத்தகங்களையும் 10% தள்ளுபடி விலையில் பெற்று பயனடையுமாறு தகடூர் புத்தகப் பேரவை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies