Type Here to Get Search Results !

பெல்லுஅள்ளி இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் 12 புதிய வீடுகள் கட்ட பூமி பூஜை.


பாலக்கோடு, செப்டம்பர் 08 (ஆவணி 23):

பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட கனபதி ஊராட்சியில் அமைந்துள்ள பெல்லுஅள்ளி இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில், ரூ.82.5 லட்சம் மதிப்பில் 12 தொகுப்பு வீடுகள் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி உதவி பொறியாளர் முருகன் தலைமையேற்றார். திமுக பாலக்கோடு மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்பன் முன்னிலை வகித்தார்.


மறுவாழ்வு மையத்தில் ஏற்கனவே 86 வீடுகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. குடியிருப்பாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, இலங்கை தமிழர் மறுவாழ்வு நிதியிலிருந்து தமிழக அரசு கூடுதலாக ரூ.82,50,000 ஒதுக்கீடு செய்து புதிய வீடுகள் கட்ட அனுமதி வழங்கியுள்ளது. அதனை தொடர்ந்து 12 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.


நிகழ்வில் ஊராட்சி செயலாளர் முனிவேல், ஒன்றிய திமுக துணை செயலாளர் அற்புதம்செந்தில், இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், நிர்வாகிகள் நடராஜ், பசுவராஜ், சௌந்திரராஜ், சக்தி, முருகேசன், உதயன், பெரியண்னன், ரங்கன், வேலு, முனிராஜ், சிவலிங்கம், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன், மேல்தெரு முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies