தருமபுரி, செப். 09, 2025 (ஆவணி 22):
தருமபுரி நகர அதிமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் கே. பி. அன்பழகன் தலைமையேற்றார். இந்த ஆலோசனை கூட்டத்தில், “மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற எழுச்சி பயணத்தின் ஒரு பகுதியாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தருமபுரி மாவட்டத்திற்கு வரும் செப்டம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் அவருக்கு சட்டமன்றத் தொகுதி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ். ஆர். வெற்றிவேல், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிச்சாமி, விவசாயி அணி தலைவர் அன்பழகன், நகர செயலாளர் பூக்கடை ரவி, மாநில மருத்துவர் அணி இணை செயலாளர் அசோகன் ஆகியோரும், நகர கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)