தருமபுரி, ஆக 03 | ஆடி 18 -
தருமபுரி மாவட்டத்தில் கடந்த 13 ஆண்டுகளாக அடித்தட்டு மக்களுக்கு பல்வேறு மனிதநேய சேவைகளை செய்து வரும் மை தருமபுரி சமூக சேவை அறக்கட்டளை, நியூஸ் 7 தமிழ் மற்றும் ஜேடன் அமைப்பு இணைந்து வழங்கும் கலாம் நம்பிக்கை விருதுகள் – 2025 இல் “மனிதகுலத்தின் இதயம் (Heart of Humanity Award)” விருதைப் பெற்றுள்ளது.
மை தருமபுரி அமைப்பு தினசரி அன்னதானம், அவசர இரத்த தானம், ஆதரவற்றோரின் உடல்களுக்கு புனித இறுதிச்சடங்கு உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த சேவைகள் பலராலும் பாராட்டப்பட்டுள்ளன. சென்னை எழும்பூரில் உள்ள மாலைமலர் அலுவலக முகூந்தா ஸ்டுடியோவில், மேதகு அப்துல் கலாம் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஸே.எம்.எச். அசன் மவுலானா அவர்கள், “மனிதகுலத்தின் இதயம்” விருதை வழங்கினார்.
மை தருமபுரி அறக்கட்டளையின் நிறுவனர் தலைவர் சதீஸ் குமார் ராஜா மற்றும் அமைப்பாளர் சையத் ஜாபர் ஆகியோர் விருதை பெற்றுக் கொண்டனர்.