Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, பான் மசாலா விற்பனைக்கு போலீஸ் கடும் நடவடிக்கை.


தருமபுரி, ஆகஸ்ட் 10 (ஆடி 25)
— 


தருமபுரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்களின் விற்பனை மற்றும் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை காவல்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.எஸ். மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


2024 ஆம் ஆண்டில் மட்டும் 151 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 203 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த 93.432 கிலோ கஞ்சா, ஒரு நான்கு சக்கர வாகனம், 19 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 23.380 கிலோ கஞ்சா, நீதிமன்ற உத்தரவு பெற்று சேலம் சரக Drug Disposal Committee-க்கு ஒப்படைக்கப்பட்டது. மேலும், கஞ்சா தொடர்பான வழக்குகளில் 5 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதே ஆண்டு, குட்கா மற்றும் பான் மசாலா போன்ற புகையிலை பொருட்கள் தொடர்பாக 323 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 342 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த 12,194.149 கிலோ புகையிலை பொருட்கள், 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் 32 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

2025 ஆம் ஆண்டில் இதுவரை 198 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 219 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 45.492 கிலோ கஞ்சா, 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நீதிமன்ற உத்தரவு பெற்று 10.220 கிலோ கஞ்சா சேலம் சரக Drug Disposal Committee-க்கு ஒப்படைக்கப்பட்டது. இதே ஆண்டில் குட்கா மற்றும் பான் மசாலா தொடர்பாக 191 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 195 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த 6,604.06 கிலோ புகையிலை பொருட்கள், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 23 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


பொதுமக்கள் போதைப் பொருட்கள் தொடர்பான புகார்களை 10581 என்ற Toll-Free எண், 94981 10581 மற்றும் 63690 28922 என்ற WhatsApp எண்கள் அல்லது DRUG FREE TN மொபைல் ஆப்பின் மூலம் எந்த நேரத்திலும் அளிக்கலாம். புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு, தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884