தருமபுரி, ஆக. 18 | ஆவணி 02 -
பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக, தருமபுரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள முகாம்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் சதீஷ்குமார் அறிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் முகாம்களில் நகரப் பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளன.
| தாலுக்கா / உள்ளூர் அமைப்பு | முகாம் இடம் | முகாம் பொறுப்பாளர் | தொடர்பு எண் |
|---|---|---|---|
| தருமபுரி நகராட்சி. | செங்குந்தர் திருமண மண்டபம், பென்னாகரம் ரோடு, தருமபுரி | திரு. சேகர், Municipality Commissioner | 7307396253 |
| அரூர் நகராட்சி. | பொன் கார்பகம் திருமண மண்டபம், அரூர் | திரு. ஆனந்த், Assistant, Town Panchayat | 8925809315 |
| தருமபுரி ஒன்றியம் | அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, இலக்கியம்பட்டி | திரு. சி. குமரேசன், BDO (VP) | 7402606956 |
| பென்னாகரம் ஒன்றியம் | கூத்தாப்பாடி பெரியார் திருமண மண்டபம் | திரு. எம். மணிவண்ணன், BDO (VP) | 7402606960 |
| ஏரியூர் ஒன்றியம் | ஊராட்சி மன்ற அலுவலகம், ஜக்கம்பட்டி | திருமதி பி. கல்பனா, BDO (VP) | 8925805350 |
| பாலக்கோடு ஒன்றியம் | சமுதாய கூடம், பாடி | திருமதி ரேணுகா, BDO (VP) | 7402606962 |
வார்டு வாரியாக நடைபெறும் இந்த முகாம்கள் குறித்து அலுவலர்கள் வழியாக மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல், தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகளும் தங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்கள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தி வருகின்றனர்.
இந்த முகாம்களின் மூலம் பொதுமக்களின் குறைகள் உடனடியாக தீர்க்கப்பட்டு, பல்வேறு அரசுத் திட்ட நன்மைகள் மக்களிடம் நேரடியாக சென்றடையும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
.gif)

.jpg)