Type Here to Get Search Results !

தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் அரசு விழா – ரூ.1705.35 கோடி மதிப்பிலான திட்டங்கள், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்.



தருமபுரி, ஆகஸ்ட் 17, 2025 (ஆவணி 1)


தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று, பல்வேறு திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதோடு, ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.


இந்த விழாவில் மொத்தம் ரூ.1705.35 கோடி மதிப்பிலான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதில் ரூ.362.77 கோடி செலவில் முடிவுற்ற 1073 திட்டப் பணிகள் திறந்து வைக்கப்பட்டன. மேலும், ரூ.512.52 கோடி மதிப்பிலான 1044 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். இதனுடன், ரூ.830.06 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் 70,427 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.


விழாவில் நகராட்சி நிர்வாகம், பொதுப்பணிகள், வேளாண்மை, நெடுஞ்சாலை, வனத்துறை, மருத்துவம், கல்வி, சமூகநலன் உள்ளிட்ட துறைகளில் நூற்றுக்கணக்கான திட்டங்கள் இடம்பெற்றன. புதிய சாலைப்பணிகள், குடிநீர் வசதிகள், மருத்துவமனை கட்டடங்கள், பள்ளி வகுப்பறைகள், அங்கன்வாடி மையங்கள், பால்வள மேம்பாட்டு நிலையங்கள், வன அலுவலகங்கள், நீர்த்தேக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மாவட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்டன.


அதேபோல், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் 40,595 பேருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது. 7,485 பேருக்கு கலைஞரின் கனவு இல்லம், 3,063 பேருக்கு குடியிருப்பு பழுது நீக்க உதவி, 2,010 சுய உதவிக் குழுக்களுக்கு கடன், 2,981 விவசாயிகளுக்கு இயந்திரமயமாக்கல் திட்ட உதவி, 500 பேருக்கு சொட்டுநீர் பாசன கருவி, 504 பேருக்கு காடு வளர்ப்பு திட்ட உதவி வழங்கப்பட்டன. மேலும், 128 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர், 800 பேருக்கு முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


விழாவிற்கு செல்லும் வழியில், முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலிமாறன் அவர்களின் பிறந்த நாளையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதோடு, நாட்டில் முதல்முறையாக “விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் திட்டம்” தொடங்கிவைக்கப்பட்டது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies