Type Here to Get Search Results !

பௌத்தர்களுக்கு நாக்பூர் தம்ம சக்கர பரிவர்தன திருவிழா புனித பயண மானியம் – விண்ணப்பங்கள் வரவேற்பு.


தருமபுரி, ஆக 02 | ஆடி 17 - 


தமிழ்நாட்டைச் சேர்ந்த 150 பௌத்தர்கள், 2025-2026 ஆம் ஆண்டில் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழா புனித பயணத்தில் பங்கேற்று திரும்பிய பின், தமிழ்நாடு அரசு வழங்கும் நிதி உதவித் திட்டத்தின் கீழ் நபருக்கு அதிகபட்சம் ரூ.5,000 வரை மானியம் பெறலாம். மானியம் ECS முறையில் நேரடியாக வழங்கப்படும்.


இந்த பயண மானியத் திட்டத்தில் பங்கேற்க விரும்பும் பௌத்தர்கள், விண்ணப்பப் படிவத்தை தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம். மேலும், www.bcmbcmz.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தேவையான ஆவணங்களுடன் 30.11.2025க்குள், ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டிடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை – 600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரத்தை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஷ், இ.ஆ.ப., அவர்கள் அறிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884