பென்னாகரம், ஜூலை 29 | ஆடி 13 -
மக்கள் தங்களின் வாழ்வாதாரச் சிக்கல்களைத் தீர்க்க, இந்த முகாமில் மகளிர் உரிமைத் தொகை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, சமூக நலன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உள்ளிட்ட 15 துறைகள் மற்றும் 46 வகையான சேவைகள் வழங்கப்பட்டன.
இந்த முகாமில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி நேரில் பங்கேற்று முகாமின் செயல்பாடுகளை பார்வையிட்டார். மேலும், முகாமில் தர்மபுரி மாவட்ட உதவி ஆணையர் (ஆயம்) S. நர்மதா, பென்னாகரம் வட்டார ஊராட்சி அலுவலர் சக்திவேல், கிராம ஊராட்சி அலுவலர் லோகநாதன், வட்டாட்சியர் சண்முகசுந்தரம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பசேகரன், திமுக ஒன்றியச் செயலாளர் மடம் முருகேசன், ஏரியூர் ஒன்றியச் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.