பாலக்கோடு, ஜூலை 29 | ஆடி 13 -
முகாமில் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரோத்தமன், தனலட்சுமி, சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அரியப்பன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய தர்மபுரி மாவட்ட திட்ட அலுவலர் மாரிமுத்து, “மக்களின் கோரிக்கைகளுக்கு நேரடியாக பதிலளிக்கும் வகையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் கடந்த வாரம் சிதம்பரத்தில் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகமெங்கும் மூன்று கட்டமாக, ஆகஸ்ட் மாதம் முழுவதும் 10,000 முகாம்கள் நடைபெறவிருக்கின்றன” என தெரிவித்தார்.
முகாமில் பொதுமக்கள், இலவச வீட்டுமனை பட்டா, மகளிர் உரிமைத் தொகை, முதியோர் ஓய்வூதியம், குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு தேவைகள் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெற்றனர். அனைத்து துறைகளை சேர்ந்த அலுவலர்கள் முகாமில் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களைப் பெற்றனர் மற்றும் உரிய பரிசீலனைக்கு நடவடிக்கை எடுத்தனர்.
இந்த முகாமில் கிராம நிர்வாக அலுவலர் ரவிந்தர், ஊராட்சி உறுப்பினர்கள் சரவணன், சிவலிங்கம் மற்றும் நிர்வாகிகள் நடராஜ், ராஜப்பன், முருகேசன், செல்வம், குப்புராஜ், வடமலை கோவிந்தராஜ், பூத்துப்பட்டி ராமமூர்த்தி, மணிவேல், ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.