பாலக்கோடும் ஜூலை 20 | ஆடி 04 -
பாலக்கோடு அருகே உள்ள மல்லுப்பட்டி ஸ்ரீ மூகாம்பிகை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் தர்மபுரி அரசு மருத்துவமனை இரத்த வங்கி இணைந்து இரத்ததான முகாமை நடத்தியது. இம்முகாமினை துவக்கி வைத்து பேசிய கல்லூரியின் தாளாளர் கே. கோவிந்தராஜீ, மாணவிகள் தன்னார்வத்துடன் இரத்ததானம் செய்ய வந்துள்ளதை பாராட்டி, தானங்களில் உயர்ந்த தானமாக இரத்ததானம் திகழ்கின்றது என்று குறிப்பிட்டார். மாணவிகள் சமூக பொறுப்புடன் வளரும் ஒரு நல்ல நலச்சான்றிதழாக இது அமைகின்றது என்றும் அவர் கூறினார்.
இம்முகாமில், கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் என மொத்தமாக 64 பேர் இரத்ததானம் செய்தனர். இரத்ததானம் செய்தவர்களுக்கு அரசு மருத்துவமனை சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், முதல்வர் இரகுநாதன், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பூர்ணிமா, துணை முதல்வர் முருகேசன், வட்டார மருத்துவ அலுவலர் அனுராதா, ஜக்க சமுத்திரம் அரசு மருத்துவமனை பொறுப்பு மருத்துவர் கார்த்தி, சுகாதார ஆய்வாளர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உற்சாகம் அளித்தனர்.