பாலக்கோடு, ஜூலை 21 | ஆடி 05 -
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா தாசில்தார் அலுவலகம் முன்பு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பல்வேறு மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கும் நோக்கில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் வட்ட துணைச் செயலாளர் திரு. அருள்குமார் தலைமையில் நடைபெற்றது. வட்டச் செயலாளர் கார்ல்மார்க்ஸ், நிர்வாகிகள் தேவராஜ், பெரியசாமி, அசோக்குமார் மற்றும் சுகதேவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டச் செயலாளர் அருள்குமார், மாவட்டப் பொருளாளர் சிலம்பரசன் மற்றும் வட்டச் செயலாளர் கோவிந்தசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு, அரசின் செயல் தாமதத்திற்கு கண்டனம் தெரிவித்தும், கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்றவர்களின் முக்கியக் கோரிக்கைகள் பின்வருமாறு:
-
சீரண்டபுரம் கிராமத்தில் உள்ள பாறை புறம்போக்கு நிலத்தில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அங்கன்வாடி மையம், நூலகம், சமுதாயக்கூடம் போன்ற சமூக உள்கட்டமைப்புகளை அரசு ஏற்படுத்த வேண்டும்.
-
அந்த கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் வசதி வழங்கப்பட வேண்டும்.
-
நான்கு தலைமுறைகளாக பூர்வீகமாக வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு வீட்டு மனை பட்டா மற்றும் மின்சாரம் இணைப்பு வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாகத் தொகுத்து, பாலக்கோடு தாசில்தாரிடம் மனுவாக வழங்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பல்வேறு மாவட்ட மற்றும் வட்டத் தலைவர், செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டு ஒற்றுமையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.