தருமபுரி, ஜூலை 16 | ஆனி 32 -
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் – II (தொகுதி II மற்றும் II A) முதல்நிலைத் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள், தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 18.07.2025 முதல் தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் அறிவித்துள்ளார்.
இந்த பயிற்சி வகுப்புகள் வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை நடைபெறும். தேர்விற்கான மாதிரி தேர்வுகள் 22.07.2025 முதல் தொடங்கி, வாரந்தோறும் மண்டல அளவில் முறையாக நடத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், குறைந்தபட்சமாக ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. தேர்வாளர்களின் சீரான பயிற்சிக்காக மையத்தில் பலவகையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன:
🔹 3,000க்கும் மேற்பட்ட நூல்கள் கொண்ட இலவச நூலகம்
🔹 இலவச Wi-Fi வசதி
🔹 இலவச கணினி பயன்பாடு
இந்த மையத்தில் 2024ஆம் ஆண்டு பயிற்சி பெற்ற 29 தேர்வர்கள் TNPSC Group II, IIA முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பதிவு செய்வது எப்படி?
இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் கீழ்கண்ட இணையதள இணைப்பில் பதிவு செய்யலாம்:
மேலும் தகவலுக்கு, நேரில் மையத்தை அணுகவோ, கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்:
📞 04342 – 288890
மாவட்டத்திலுள்ள தகுதி வாய்ந்த இளைஞர்கள், இந்த இலவச பயிற்சி வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி, வருங்கால அரசு பணியாளராக உயர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுள்ளார்.