பாலக்கோடு, ஜூலை 22 | ஆடி 06 -
முகாமுக்கு தர்மபுரி மேற்கு மாவட்ட திமுகச் செயலாளர், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார். அவர் உரையாற்றும் போது, “தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் மக்கள் நலத்தைக் கருத்தில் கொண்டு தொடங்கியுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் வரை மூன்று கட்டமாக 10,000 இடங்களில் நடைபெறவுள்ளன. இதில் மக்கள், இலவச வீட்டுமனை பட்டா, மகளிர் உரிமைத் தொகை, முதியோர் ஓய்வூதியம், குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளிக்கலாம்” எனத் தெரிவித்தார்.
முகாமில் தாசில்தார் அசோக் குமார், டி.எஸ்.பி மனோகரன், பேரூராட்சி செயல் அலுவலர் இந்துமதி, மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்பன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்று, பொதுமக்களிடம் இருந்து நேரில் மனுக்களை பெற்றனர்.
முகாமில் காவல் ஆய்வாளர் பாலசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகா, கவுன்சிலர்கள் மோகன், ஜெயந்தி மோகன், சரவணன், பத்தேகான், ரூஹித், சிவசங்கரி, ராஜலட்சுமி, பிரியா குமார், திமுக நிர்வாகிகள் பி.எல்.ஆர். ரவி, குமரன், ராஜீ, பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு முகாமினை சிறப்பித்தனர். இத்தகைய முகாம்கள், அரசின் நலத்திட்டங்களை நேரடியாக மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு சமூக நல ஒழுங்கு செயல்பாடாக அமைந்துள்ளது.
- செய்தியாளர் வேலு.