தருமபுரி, ஜூலை 22 | ஆடி 06 -
தருமபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டி பகுதியில் இயங்கி வரும் அன்னையர் ஆலயம் முதியோர் இல்லத்தில் பராமரிப்பில் இருந்த முதியவர் ராஜப்பா (வயது 84) இன்று காலை வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார், கடந்த மூன்று ஆண்டுகளாக இல்லத்தில் பரமரிப்பில் இருந்து வந்த இவர், இல்ல உறுப்பினர்களால் மதிப்பும் மரியாதையும் பெற்றிருந்தவர்.
இவரது மறைவையொட்டி, மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினர் அவரது உடலை நல்லடக்கம் செய்தனர். இறுதி ஊர்வல நிகழ்வில் மை தருமபுரி அமைப்பின் தலைவர் சதீஸ் குமார் ராஜா, ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அமைப்பாளர்கள் அருள்மணி, செந்தில், சண்முகம், மற்றும் தன்னார்வலர் ஜெய் சூர்யா ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
மை தருமபுரி அமைப்பின் மூலம் இதுவரை 151 புனித உடல்களுக்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது, இது சமூகத்தில் தனித்துவமான சேவையாக கருதப்படுகிறது. இதுபோன்ற செயற்பாடுகள் சமூக நலத்தின் முக்கியத்துவத்தை நினைவூட்டுகின்றன. பொதுமக்கள் மற்றும் இல்ல நிர்வாகம், மை தருமபுரி அமைப்பினருக்கு நன்றி தெரிவித்து, சமூகத்தின் சேவையளிக்கும் இந்த பணி தொடர வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளனர்.