மொரப்பூர் | ஜூலை 16, 2025
தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொரப்பூர் ஒன்றியம், கம்பைநல்லூர் வி. புதூர் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், மாணவ மாணவியருக்காக ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை அமைக்கும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, அதை பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2,00,000 மதிப்பீட்டில் அமல்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை, புதிய தொழில்நுட்ப வசதிகளுடன், மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆழ்ந்த கற்றலுக்கான சூழலை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே. சம்பத் குமார் அவர்கள் சிறப்பாக தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் இதில் பெரிதும் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்நிகழ்வில், அதிமுகவின் மொரப்பூர் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வம், கம்பைநல்லூர் பேரூர் செயலாளர் தனபால், ஒன்றிய அவைத் தலைவர் ராமஜெயம், கணேசன், அறிவழகன், பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.