கம்பைநல்லூர் அடுத்த வி. புதூரில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணிக்காக பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தத் திட்டம், அரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.21,35,000 மதிப்பீட்டில் கட்டப்படுகிறது, இந்த பூமி பூஜை நிகழ்வை, அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே. சம்பத் குமார் அவர்கள் முன்னிலை வகித்து நடத்தினார்.
இந்நிகழ்வில், அதிமுகவின் மொரப்பூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வம், கம்பைநல்லூர் பேரூர் செயலாளர் தனபால், ஒன்றிய அவைத் தலைவர் ராமஜெயம், கணேசன், IT விங் அறிவானந்தம், பாபு, சக்திவேல், அறிவழகன், தாசன், மாது, ஆதிமூலம், சுப்பிரமணி, ராஜலிங்கம், கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.